recipe2016jun

செவிக்குணவு இல்லாத போழ்து (Edit)

பத்மா(Edit)

சாமை தக்காளி சாதம்(Edit)

தேவையான பொருட்கள்(Edit)

சாமை அரிசி - 1 கோப்பை

பெரிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கியது

தக்காளி - 2 , விழுதாக அரைத்தது

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பிரியாணி இலை - 1

சிறிதளவு கொத்தமல்லி, புதினா

எண்ணெய் - 4 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை(Edit)

வெறும் வாணலியில் சாமை அரிசியை 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும். அரிசி பொரிந்து விட கூடாது. லேசாக சூடானால் போதுமானது. இப்படி செய்தால் சாதம் குழையாமல் இருக்கும்.

சமைப்பானில் (குக்கர்) எண்ணெய் + நெய் காய வைத்து அதில் சீரகம், சோம்பு, பிரயாணி இலை சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறம் ஆனதும் பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை (2-3 நிமிடம்) வதக்கவும்.

பிறகு இதனுடன் தக்காளி அரைத்த விழுது சேர்த்து நன்கு எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் கொத்தமல்லி புதினா மற்றும் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் சாமை அரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து சேர்த்து 1 சத்தம் வரும் வரை வேகவிடவும். 1 சத்தம் வந்ததும் சமைபானை அடுப்பை மிதமான சூட்டில் 5 நிமிடம் வைத்திருக்கவும்.

சுவையான சாமை தக்காளி சாதம் தயார்.

    • விருப்பட்டால் இதனுடன் வேகவைத்த பச்சைப்பட்டாணி சேர்க்கலாம்.
    • 2 கோப்பை தண்ணீருக்குப் பதிலாக 1 கோப்பை தண்ணீர் 1 கோப்பை தேங்காய்ப்பால் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


Powered by LionWiki. Last changed: 2016/06/09 07:52 Erase cookies Edit History