| Main page Recent changes | Edit History | |
kss3 | ||
|---|---|---|
சூழலியல் வேளாண்மை(Edit)தமிழாக்கம் A.K.ரவிசங்கர்(Edit)(ஹைதராபாத் நகரில், 1-3 ஏப்ரல் , 2016 நாட்களில் நடைபெற்ற உழவர் விடுதலைப் பேரியக்கத்தில், சூழலியல் வேளாண்மை பற்றிய கலந்துரையாடல் குறிப்புகள்) செயற்கை உரங்கள் இல்லாது தோட்டத்தின் கழிவுகளையே மறுசுழற்சி செய்தும், மக்க வைத்தும் கால்நடை வளர்ப்போடு கூடிய பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வித்திடும் இயற்கை வழி வேளாண்மையே நம் மரபாக இருந்து வந்துள்ளது.1960 களில் ஏற்பட்ட நாட்டின் உணவுப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்திய அரசு பசுமைப் புரட்சியை வித்திட்டது. பசுமைப் புரட்சியின் கோரத் தாண்டவத்தையும் அது சமூகம், பொருளாதாரம் , சூழலியல், பொது சுகாதாரம் என ஒவ்வொரு தளத்திலும் ஏற்படுத்திய மாபாதக அம்சங்களையும் இப்போது பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா ஆய்வு அறிக்கைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சீரழிந்துவரும் மண் வளம், பாழடைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், இயற்கை வள சுரண்டல், நஞ்சாக்கப்படும் சுற்றுச் சூழல், வானுயர்ந்த விவசாய உற்பத்திச் செலவுகள், அதிகரித்து வரும் விவசாயக் கடன்கள் மற்றும் அதை சார்ந்த தற்கொலைகள் ஆகியவையே இன்றைய வேளாண்மையின் நிலையாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.லாபமற்ற நிலையற்ற நியாயமற்ற விவசாய சந்தையும் இயற்கைப் பேரிடர்களும் இப்பிரச்சனைகளை மேலும் பூதாகரமாக்குகின்றன. நம் உணவு இன்று செயற்கை உரங்களால் நஞ்சாக்கப்படுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சீரழிந்த விவசாயம் இன்று பசுமைப் புரட்சியின் சான்றாக உள்ளது. சுற்றுச் சூழலை கருத்தில் கொள்ளாமல் கொண்டுவரப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் நம் நாட்டில் எத்தகைய சீர்கேட்டினை விளைவிக்கும் என்று அம்மாநிலம் நமக்கு உணர்த்துகிறது. நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்வுகள்(Edit)பல முன்னோடி விவசாயிகள் இன்று நீடித்த சுற்றுச் சூழலை உறுதி செய்யும், நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி பூணும், வளர்ச்சியை நோக்கிய, அறிவியல் ரீதியிலான வேளாண்மை முறைக்கு மாறியுள்ளனர். இயற்கை வேளாண்மை ,ஜீரோ பட்ஜெட் விவசாயம் , சூழலியல் வேளாண்மை,பயோ டைனமிக் வேளாண்மை,ஆர்கானிக் விவசாயம்,கரிம வேளாண்மை,பெர்மா கல்ச்சர் எனப் பல பெயர்களில் அவை அழைக்கப்பட்டுப் பரவலாக்கப்படுகின்றன. இவையாவுமே செயல் வடிவத்தில் ஒரு சில வேறுபாடுகள் உள்ளதை போன்று தோன்றினாலும் இவை யாவுமே ஒத்த நோக்கத்தோடு நீடித்த நிலைத்த விவசாயத்திற்கே வழி வகுக்கின்றன, இம்முறைகள் 1) வேதியியல் /செயற்கை உரங்களை, மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துவதில்லை. இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறைகளை, தோட்டத்திலேயோ அல்லது உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் வளர்ச்சியூட்டிகளையோ கொண்டு மட்டுமே செயல் படுகின்றன. 2) இயற்கை வள சுரண்டலை தடுக்கிறது. இயற்கை வளத்தை வளர்த்து பாதுகாக்கின்றது. 3) பாதுகாப்பான நஞ்சற்ற தரமான உணவு உற்பத்தியை உறுதி செய்கின்றன. 4) கால்நடை வளர்ப்போடு கூடிய ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கின்றன. 5) கழிவுகளை மறுசுழற்சி செய்து உரங்களையும் ,அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எளிய பொருட்களின் மூலம் வளர்ச்சி ஊக்கிகளையும் தானே உற்பத்தி செய்து பயன்படுத்துவதின் மூலம் அதிகரித்து வரும் இன்றைய வேளாண்மை உற்பத்தி செலவுகளை குறைத்து நீடித்த வளர்ச்சிக்கு வழி காண்கின்றன. ஏழ்மை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு,புவி வெப்பமயமாதல் போன்ற பல தலையாய உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பொருளாதார மேம்பாடு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதிசெய்யும் மற்றும் விவசாய பெண்கள். தொழிலாளிகள்.குறு மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் சூழல் சார்ந்த விவசாயமே இன்றைய தலையாய தேவை என்பது உலகெங்கும் வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில், சூழல் சார்ந்த விவசாயம் i.இன்றைய முக்கிய விவசாய பிரச்சனைகளுக்கு விடையாக உள்ளது. ii. கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறது. iii.தற்சார்பான வாழ்கைக்கு வழி கோலுகிறது Iv.பாதுகாப்பான நஞ்சற்ற சத்துமிக்க உணவினை உற்பத்தி செய்கிறது. V.சமூக பொருளாதார பிரச்சனைகளை களைகிறது. Vi.சந்தை மட்டுமே நோக்கம் என்றாலும் கூட, வளர்ந்து வரும் செழிப்பான சந்தையை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த சூழலியல் விவசாயம் பெரும் பரப்பளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளன. எனவே இவை யாவும் தத்துவம் மட்டுமல்ல அதையும் தாண்டி இந்திய விவசாயத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் வளர்ச்சி பாதையில் செலுத்தும் நடைமுறையில் சாத்தியமான ஒரே கருவி.சூழலியல் அமைப்புகளையும் தாண்டி பல தரப்பட்ட மத, ஆன்மிக,கலாச்சார,கிராமிய முன்னேற்றத்தை சார்ந்த அமைப்புகளும் பெரும் அளவில் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி கொண்டுவருவதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இயற்கை விவசாயம் செய்யும் இந்த விவசாயிகளை ஆஷா (ASHA) கீழ்க்கண்டபடி வகைபடுத்துகிறது i. பரம்பரை இயற்கை விவசாயிகள் : பழங்குடி, மலை மற்றும் காடுகளை ஒட்டி வாழும் பல மக்கள் தொன்று தொட்டு இயற்கை விவசாயத்தை கடைபிடித்து வருகின்றனர். சந்தைகளில் கூவி விற்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லி விஷங்கள் இவர்களுக்கு கிடைக்காமல் இருப்பது கூட ஒரு காரணம். இவர்கள் பெரும்பாலும் தம் சொந்த நுகர்விற்க்காக உற்பத்தி செய்து மிஞ்சியதை உள்ளூர் சந்தையில் விற்று வருகின்றனர். ii. சந்தையை நோக்கிய இயற்கை விவசாயிகள்: சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இயங்கும் இயற்கை விவசாய விற்பனையாளர்கள் இவர்கள். iii. தன் முனைப்பு இயற்கை விவசாயிகள் : இவர்கள் இயற்கை மற்றும் பொது நல விரும்பிகள். இயற்கை விவசாயத்தை, வியாபாரத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுபவர்கள். முழு தன் ஆர்வம் மற்றும் தன் முனைப்பின் காரணமாகவே விவசாயம் செய்பவர்கள். சமூகம் ,சூழல் சார்ந்த பல கொள்கைகளோடு விவசாயம் செய்பவர்கள் . இவர்களில் பலரும் இயற்கை விவசாய பயிற்சிக் கூடங்களை பொது நலத்தோடு நடத்தியும் மேலும் அதை ஒரு இயக்கமாகவும் வழி நடத்தி வருபவர்கள். இந்த மூன்று வகைகள் தான் என்றில்லாமல் மேலும் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி இவற்றை பலவாறு வகைப்படுத்த முடியும். மூன்றாவது வகை இயற்கை விவசாயிகளை பெருமளவில் உருவாக்குவதன் மூலமே மிகப்பெரும் சூழல் சமுதாயம் விவசாயம் சார்ந்த புரட்சியோடு கூடிய வளர்ச்சியை எற்படுத்த முடியும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இயற்கை விவசாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கூறிய அனைத்து வகை இயற்கை விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லக் கூடிய பொறுப்பில் நாம் உள்ளோம்.
இயற்கை விவசாயத்தின் தடைக் கற்கள் (Edit)பெருமளவில் வளர வாய்ப்புள்ளபோதும் இயற்கை விவசாயத்தின் வளர்ச்சி இந்தியாவில் கீழ்க் கண்ட சில பொது விடயங்களால் தாமதப்படுத்தப்படுகிறது. இப்பிரச்சனைகளை களைந்து இயற்கை விவசாய இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது நம் முன் இருக்கும் மிகப் பெரும் பொறுப்பு. i. இன்றைய பெரும் தேவைகளை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம் சாத்தியப்படாது என்ற மேலெழுந்த வாரியான மன மாயை- இது நம் கல்வி முறையோடு பெருமளவில் தொடர்புடையது. ii. நாட்டின் கடைக் கோடி மக்களுடன் மற்றும் குறு ,சிறு விவசாயிகளுடன் உள்ள தொடர்பு இடைவெளி. iii. இயற்கை விவசாய பொருட்களுக்கான கிடங்குகள் ,போக்குவரத்து மற்றும் சந்தைப் படுத்துதலில் உள்ள சவால்கள். iv. எளிமைப் படுத்தப்பட வேண்டிய சிக்கல்கள் பல நிறைந்த இயற்கை விவசாய சான்றளிப்பு முறைகள். v. இயற்கை விவசாயத்திற்கு எற்ற மரபு விதைகள் பெருமளவில் கிடைக்காமை. vi. இயற்கை விவசாயம் அறிவுபூர்வமானது. vii. இயற்கை விவசாயத்திற்கு பெருமளவில் ஆள் பலம் வேண்டும் என்ற மாயை. viii. இத்துறையில் மேலும் பல புதுமைகளைப் புகட்டி மெருகேற்ற போதிய விவசாய ஆராய்ச்சிக் கூடங்கள் இதற்கெனவே இல்லாமை. ix. இயற்கை விவசாயத்தை பெருமளவில் பரப்பாமல் மேலும் மேலும் செயற்கை உரங்களை மானியத்தில் தருவதையே தன் தலையாய கடமையென எண்ணும் அரசாங்க மனநிலை. x. செயற்கை உரங்கள் /வளர்ச்சியூட்டி விஷங்களின் பயன்பாட்டு விதி முறைகள், சந்தையாக்கம் சரிவர முறைப் படுத்தாமை .சட்ட விதி மீறல்கள். xi. அறிவியல் உண்மையற்ற தேவையில்லாத அசுரத்தனமான மரபணு மாற்று விதை/பொருட்களின் சந்தையாக்கம் மற்றும் பரவலாக்கம். xii. முறைப்படுத்தப்படாத இயற்கை விவசாய உள்ளீடுகள் (உரங்கள் /வளர்ச்சி ஊக்கிகள் ) தயாரிப்பு, தரம் மற்றும் சந்தையாக்கம். xiii. அரசாங்க கட்டமைப்புகள் மற்றும் அதன் கொள்கை செயல் திட்டங்கள் இயற்கை விவசாயத்தை பெருமளவில் கண்டுகொள்வதேயில்லை. xiv. இயற்கை விவசாய வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்காமை / நிதிப் பற்றாக்குறை. xv. தற்போது செயல் பாட்டில் உள்ள முறையாக ஒருங்கிணைக்கப்படாத செயல் படுத்தப்படாத அரசாங்க செயல் திட்டங்கள் மற்றும் மானியங்கள். xvi. இந்தியா முழவதும் பரந்து விரிந்துள்ள பல்வேறு வகைப்பட்ட விவசாய நில தகவமைப்புகள் மற்றும் மக்களின் தேவைகளைப் பற்றிய புரிதல். xvii. உள்நாட்டு கால்நடை இனங்களின் தேவை, மரபணு சேமிப்பு, அவற்றின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம், இயற்கை விவசாயத்தை அரவணைத்துச் செல்ல வேண்டும். xviii. இயற்கை விவசாய விளைபொருட்களின் இருப்பு, மலிவு விலை மற்றும் நுகர்வோர் நன்னம்பிக்கை பரவலாக்கப்படவேண்டும். பல் சிறப்புகள் கொண்ட இந்த இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல பெரும் நிதி ஆதாரமும் சிறந்த செயல் திட்டங்களும் தேவை. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம். பெரும் பரப்பளவில் சூழல் விவசாயத்தை முன்னெடுக்க நமக்கு தேவையானவை(Edit)பொதுவானவை 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் விளைநிலங்களும் குறைந்தபட்சம் 10% இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உணவு நுகர்வில் குறைந்தபட்சம் 10% இதன் மூலம் பூர்த்திசெய்யப்பட வேண்டும். மாநில அரசாங்கங்கள், தத்தமது மாநிலங்களில் முழு இயற்கை விவசாய மண்டலங்கள்/மாவட்டங்கள்/பகுதிகள்/வட்டங்கள் என அதன் உள்ளூர் வேளாண்மை தகவமைப்புகளைக் கொண்டு தேர்வு செய்து அறிவித்து பரவலாக்க வேண்டும் முக்கியமாக மானாவாரி விளைநிலங்கள் (இயற்கை விவசாயம் இதன் சராசரி உற்பத்தியை பெருமளவில் உயர்த்தும்) , செழிப்பு மிக்க மலைப் பிரதேசங்கள் மற்றும் காடு & அதை சார்ந்த பகுதிகளில் இயற்கை விவசாயம் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு பரவலாக்கம் செய்யப்படவேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலமும் அதன் விவசாய தகவமைப்பிற்கு ஏற்ப மாநில இயற்கை விவசாயக் கொள்கை மற்றும் செயல் திட்டங்களை அதன் அனைத்து தரப்பு மக்களின் கூட்டு முயற்சியோடு வகுக்க வேண்டும். கள உற்பத்தி ,சந்தைப்படுத்துதல் என இயற்கை விவசாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் நன்கு பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மனித வளத்தை உருவாக்கி பெருக்க வேண்டும். வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆவணமாக்கம் சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இயற்கை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு போதிய அளவில் நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு அதன் அனைத்துத் துறைகளும் கூடிய விரைவில் முழு செயல்பாட்டுக்கு வந்து தேங்கியுள்ள தேசிய இயற்கை விவசாய கூட்டுத் திட்டங்களை நாடு முழுவதும் உள்ள AICRP மையங்களுடன் இணைந்து செயல்படுத்தவேண்டும். நாடு முழுவதும் உள்ள வேளாண் விரிவாக்க அறிவியல் நிலையங்கள் (KVKs),SFCI (State Farms Corporation of India) என அனைத்து தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்களும் அது அமைந்துள்ள பகுதிகளில் ஒரு மாதிரி இயற்கை விவசாய பண்ணையை அமைத்து பராமரித்து தொடர்ந்து ஆய்வுகளை ஆவணப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒவ்வொரு வருவாய்க் கோட்டத்திலும் (Blocks) ஒரு மாதிரி இயற்கை விவசாய பண்ணையை அமைக்க வேண்டும். அந்த பகுதிகளில் உள்ள அரசு சார அமைப்புகள் (NGOs) மற்றும் தனி நபர்கள் இயற்கை விவசாய பண்ணையை அமைக்க முன் வந்தால் உதவ வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில வேளாண்மை பல்கலைக் கழகங்களும் இயற்கை விவசாயத்துக்கென தனி ஒரு துறையை ஏற்படுத்தி இயற்கை விவசாய பாடங்களையும் பட்டங்களையும் வகுத்துப் போதிக்க வேண்டும். இயற்கை விவசாய பண்ணைகளிலிருந்து அனைத்து பயிர் சாகுபடி முறைகள் ,நோய்கள், மகசூல் , ஆகிய விவரங்கள் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்படவேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்து பயிர் ஆய்வு முடிவுகள், இயற்கை விவசாய புதுமைகள்,மாநிலம் தழுவிய இயற்கை விவசாயிகளின் விவரப் பட்டியல், விவசாய உள்ளீடு உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பற்றிய பட்டியலையும் உடையதாக இருக்க வேண்டும். இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து பள்ளிப் பாட புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும். நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் குறைந்த பட்சம் 30% இயற்கை விவசாயத்துக்கென ஒதுக்கப்படவேண்டும். தகுந்த இனக்கலப்பு (breeding) முறைகளைக் கையாண்டு இயற்கை விவசாயத்துக்கென இனக்கலப்பு விதைகள் உருவாக்கப்பட வேண்டும். பரவலாக்கம் & விரிவாக்கம் சான்றளிக்கப்பட்ட பண்ணைகள் என்றில்லாமல் நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாய பண்ணைகளின் விவரங்கள்,பயிர் மற்றும் மகசூல் விவரங்கள் ஆய்வு முடிவுகள் அனைத்தும் முறையாக பரமரிக்கப் படவேண்டும். இவை யாவும் எதிர் கால திட்டமிடலுக்கு உதவிட வேண்டும். நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 இயற்கை விவசாய விளக்கப் பண்ணைப் பள்ளிகள், நன்கு செயல்பட்டு வரும் இயற்கை விவசாய பண்ணைகளில் அமைக்கப்பட்டு அவை விவசாய ஆர்வலர்களுக்கு முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் பயிற்சி வழங்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மூத்த இயற்கை விவசாயிகள் பெரும் அளவில் தேர்வு செய்யப்பட்டு நாடு முழுவதும் கடை நிலை இயற்கை விவசாய பரவலாக்க & விரிவாக்கப் பணிகளில் பணியமர்த்தப்படவேண்டும். நாட்டுப் புறக் கலைகள் தொடங்கி இன்றைய முகநூல், ட்வீட்டர் என அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் பெரும் அளவில் இயற்கை விவசாய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்படவேண்டும். இயற்கை விவசாய உயிர் உள்ளீடுகள் உற்பத்தி & விநியோகம் மரபு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட வேண்டும். இயற்கை விவசாய இயக்கங்கள் /அமைப்புகளின் உதவியோடு மரபு /நாட்டு இன விதைகளை சேகரித்தல்,பாதுகாத்தல் மற்றும் இனக்கலப்பு செய்து வீர்யமிக்க புதிய ரகங்களை வெளியிடவேண்டும். இயற்கை உர உற்பத்திக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படவேண்டும்.(பசுக் கூடங்கள், பயிர் கழிவுகள் ,கால்நடை கழிவுகள் ) நாட்டு இன கால்நடை அபிவிருத்தி மற்றும் பாதுகாத்தலுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படவேண்டும். இயற்கை விவசாய உயிர் உள்ளீடுகள் உற்பத்தியில் வரிச் சலுகைகள் (விற்பனை வரிகள் , மதிப்பு கூட்டு வரிகள்-VAT உட்பட) அளிக்கப்படவேண்டும். இயற்கை விளைபொருட்கள் விற்பனை பள்ளிகள், கல்லூரிகள்,மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், நியாய விலை /ரேஷன் கடைகள் ஆகியவற்றின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் இயற்கை விவசாயிகள் ,இயற்கை விவசாய உற்பத்தி நிறுவனங்களிடம்(FPOs) இருந்து விலை பொருட்கள் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தையை ஏற்ப்படுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ,முதியவர்கள், நோயாளிகள் ,ரேஷன் கடைகளையே நம்பி இருக்கும் கோடிகணக்கான கடை நிலை ஏழை குடிமக்கள் ஆகியோர் சத்து மிக்க பாதுகாப்பான நல்ல உணவினை உண்ண முடியும். அரசாங்க உணவுக் கொள்முதல் கொள்கைகள்/திட்டங்கள் நேரிடையாக விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து விலை பொருட்களை 10% அதிக சந்தை விலையுடன் கொள்முதல் செய்து ஆதரிக்க வேண்டும். இயற்கை விவசாய விளைபொருட்களை விற்க தனியாக “இயற்கை உழவர் சந்தைகளை” உடனடியாக அமைக்க வேண்டும். “இயற்கை விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள்” சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் கிடங்குகளை அமைக்க முதலீடுகள் செய்யப் படவேண்டும். நேரடி உழவர் விற்பனையை (விற்பனைத் திருவிழா , இயற்கை பஜார்) ஊக்குவிக்க முதலீடுகள் செய்யப் படவேண்டும். இயற்கை விவசாயிகள் உற்பத்தி கம்பெனி/நிறுவனங்களுக்கு முதல் 10 வருடங்களுக்கு 100 % வரி விடுமுறையும், இயற்கை அல்லாத விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50% வரி விடுமுறையும் அளிக்கப்படவேண்டும். நிதி உதவித்தொகை அளித்தல் இயற்கை விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட சூழல் சேவைகளுக்காக உதவித்தொகை அளிக்கப்படவேண்டும். மண்ணின் கரிம வளத்தை பெருக்க தண்ணீர், பல்லுயிர் பெருக்கம், ஆற்றல் சேமிப்பு போன்ற ஆக்கப் பணிகளுக்கு. ஒருங்கிணைந்த பண்ணை அமைப்புக்கு வளாகக் கழிவுகளை மறுசுழற்சி செய்து “வளாகக் காய்கறி தோட்டம்” (Campus Garden) அமைத்து முறையாகப் பராமரிக்க பள்ளி கல்லூரிகளுக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை அளிக்கப்படவேண்டும். இயற்கை விவசாய திட்டங்களில் பெண் விவசாயிகள், குத்தகை விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி (SC /ST ) இன விவசாயிகளுக்கு கூடுதலாக 10% உதவித்தொகை அளிக்கப்படவேண்டும். முழுவதும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பிய மாநிலங்களுக்கு நடுவண் அரசு 20% கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முழு இயற்கை விவசாய கிராமங்கள் , கோட்டங்கள், மாவட்டங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு அங்கீகாரமும் சலுகைகளும் அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படவேண்டும். இங்கு செயற்கை வேளாண் உள்ளீடுகள், மரபணு மாற்றப் பொருட்களின் விற்பனை மற்றும் வியாபாரம் மற்ற அரசாங்க செயற்கை வேளாண்மை மானியங்கள் முற்றிலும் தடை செய்யப்படவேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள், ஏழைகள், விதவைப் பெண்கள் ஆகியோர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட சிறப்புத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும். வனப்பகுதிகள் ,மலைப் பிரதேசங்கள் உட்பட இதர பாதுகாக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள உதவித்தொகை அளிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படவேண்டும். தனிப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் என இருதரப்புக்கும் பலன் தரும் வகையில் தனிப்பட்ட முறையில் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். திறன் மேம்பாடு மற்றும் இயற்கை விவசாய ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக தொண்டு நிறுவனங்களுக்கும் உதவித்தொகை அளிக்கப்படவேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் 30% பயிர் காப்பீட்டு பிரீமியம் குறைக்கப்படவேண்டும். புதிய அரசாங்க கட்டமைப்பு தேவை மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் மத்திய குடும்பநல அமைச்சகத்தில் இயற்கை விவசாயத்துக்கென தனி ஒரு துறை ஏற்படுத்தி அதற்கு தனி ஒரு செயலாளர் (இ வி) மற்றும் இணை செயலாளர் (இ வி) நியமிக்கப்படவேண்டும். உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் இருந்து இயங்கும் தேசிய இயற்கை விவசாய மையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 6 மண்டல இயற்கை விவசாய மையங்களுக்கும் தனி இணை செயலாளர் (இ வி) நியமிக்கப்படவேண்டும். உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் இருந்து இயங்கும் தேசிய இயற்கை விவசாய மையத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டும் அதன் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வழி செய்யும் பொருட்டும் பல் அமைச்சகம் மற்றும் பல் துறைகளை ஒருங்கிணைத்து இதற்கென தனி ஒரு ஒற்றை சாளர குழு அமைக்க வேண்டும். அனைத்து மாநிலத் துறைகளிலும் இணை இயக்குனர் தலைமையில் இயற்கை விவசாயத்துக்கென தனி ஒரு குழு அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளைக் ஒருங்கிணைத்து தொழில் நுட்ப திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்ச்சிக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். உற்பத்தி,பதப் படுத்துதல்,மதிப்புக் கூட்டல், சந்தைப் படுத்துதல் ஆகிய ஒருங்கிணைந்த பணிகளுக்காக இயற்கை விவசாயிகள் உற்பத்தி கம்பெனி/நிறுவனங்களுக்கு அவற்றை ஒருங்கிணைத்து அரசாங்கம் நேரடி பண பரிவர்த்தனை செய்ய வேண்டும்.விவசாயிகள் உற்பத்தி கம்பெனி/நிறுவனங்கள் குறைந்த பட்சம் 20 விவசாயிகளை கொண்டிருக்கவேண்டும் அதிக பட்சம் அதன் விருப்பமே. பெரிய விவசாயிகள் உற்பத்தி கம்பெனி/நிறுவனம் எனில் அதற்கேற்ப திட்டங்கள் வடிவமைக்கபடவேண்டும். வெளிப்டையாக விவசாய செய்திகள் வலை தளங்களில் முழுமையாகப் அளிக்கப்படவேண்டும். கைப்பேசி செயலிகள் (Apps) உட்பட பல தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலமும் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்பட்டு நாடெங்கிலும் உள்ள இயற்கை விவசாயிகளும் விவசாய கம்பெனிகளும் வழி நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் இயற்கை விவசாயத்துக்கென தனி ஒரு நிதி நிறுவனத்தை/அமைப்பை நிறுவியும் ஊக்குவிக்கலாம். திட்டங்களின் ஒருங்கிணைப்பு அவசியம் இயற்கை விவசாய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் யாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில மற்றும் மத்திய அரசாங்கத் திட்டங்களின் தரவுகளை ஒருங்கிணைத்து திட்டங்கள் மீண்டும் மீண்டும் இரட்டிப்பாவதை தடுத்து மக்கள் சக்தி மூலம் அரசாங்கத்தை வழி நடத்தி இயற்கை விவசாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும். அசுரத்தனமான மரபீனி மாற்ற தொழில்நுட்ப இடைச் செருகலைத் தடுத்து நிறுத்தி செயற்கை விவசாய உள்ளிடுகளின் பயன்பாடு மற்றும் பரவலாக்கத்தை ஒழுங்குபடுத்துவதும் நம் தலையாயக் கடமையாகும். நம் குழு கலந்துரையாடல் மேற்குறிப்பிட்ட தடைக் கற்களை தகர்த்தெறிந்து இயற்கை விவசாயத்தை எப்படி உள்ளுரிலும் தேசிய அளவிலும் முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை மையமாகக் கொண்டு இருக்கட்டும்.
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/13 04:25 Erase cookies | Edit History | |