| Main page Recent changes | Edit History | |
globalisation | ||
|---|---|---|
உலகமயமும் வேலைவாய்ப்புகளும்(Edit)பாமயன் நமது அரசியல்வாணர்களும், பொருளில் மேதைகளும் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கின்ற உலகமயமாக்கல் படுபாங்குழியில் விழுந்து கொண்டு இருப்பதை நெருப்புக்கோழிபோல கண்ணை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு பார்க்க மறுக்கின்றனர். உலகப் பொருளாதாரத்தில் ஒன்றிணைவோம் 'பாலாறும் தேனாறும் பாரெல்லாம் ஓடும் பருக வாரீர் பாரதத்தீரே!' என்று முழங்கிக் கொண்டிருந்த மேதாவிகள் இன்று முனங்கக் கூட முன்வரவில்லை. தாராளமயமாக்கமும் தனியார்மயமாக்கமும் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்று பால்டிக் பருவட்டு குறிப்பெண் கூறுகிறது. (பால்டிக் குறிப்பெண் என்பது லண்டனில் அமைந்துள்ள பால்டிக் நாடுகளில் கடல் போக்குவரத்தில் நடத்தப்படும் வணிகத் துறை சார்ந்த விலை போன்றவற்றைக் கூறும் பரிமாற்றகம்) பொதுவாக உலக வணிகம் ஏற்றுமதி, இறக்குமதிகளில் இரும்புதாது, நிலக்கரி, உணவுப்பொருள் ஆகியவற்றின் மரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது, அண்மைக் காலங்களில் இந்த பரிமாற்றம் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அதாவது 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்சத்தை நோக்கிப் பறந்த பரிமாற்றம், 2008இல் பெரு உச்சத்தைத தொட்டு இப்போது 2015ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டிற்கும் குறைவாக விழந்தொடங்கிவிட்டது. இது ஒருபுறம் இருக்க போர்ப்ஸ், ஆக்ஸ்பாம் போன்ற அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் உலக முழுமையும் பரந்துபட்ட சாதாரண மக்களின் வேலைவாய்ப்பைக் குறைத்துள்ளன என்றும், குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இயற்கை வளஙகளைக் கொள்ளையிடும் தன்மை கொண்டதாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. ஜெனீவா நகரில் 2000 ஆம் ஆண்டில் நடந்த சமூக உச்சிமாநாடு, உலக மயமாக்காத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான விளைவுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கோபன்ஹேகன் நகரில் 1995 இல் இதே போன்ற சமூக உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், குறிப்பாக சமூகப் பாதுகாப்பு தொடர்பான செயல்திட்டங்கள் ஏதும் செம்மையுறச் செயல்படுத்தப்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. அடுத்து ஆங்காங்க் நகரில் நடக்கவுள்ள உலக வணிக நிறுவனத்தின் மாநாடு பன்னாட்டு நிறுவனங்களின் அடுத்த கட்ட சந்தைப்படுத்தலை மையமாக்கி நடக்கவுள்ளது. தாராளமயத்தை மேலும் தாளாரமயமாக மாற்றுவது எப்படி என்பதுதான் அதன் நோக்கம். வளரும் நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளிலும் வேலையின்மையை பரவலாக்கும் போக்கு குறித்த அந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் தெளிவாக்குகின்றன. தாராளமயம் என்னும் கட்டுப்பாடற்ற முதலீடுகளின் போக்கால் பயன்பட்டவை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களோ ஏராளமான உழைக்கும் மக்களும் மூன்றாம் உலக நாடுகளுமே. இன்னும் குறிப்பாகச் சொன்னால், உலக மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் நாளென்றுக்கு 3 டாலர்களுக்கும் குறைவான வருமானத்தில் காலந்தள்ளுகின்றனர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்னும் மோசம். உலக மக்களை 5 பகுதியாகப் பிரித்தால், அதில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் 82 விழுக்காடு வசதிகளை நுகர்கின்றனர். அடிமட்டத்தில் உள்ளவர்கள் (5 இல் 1 பங்கினர்) ஒரு விழுக்காட்டளவே வாய்ப்புகளைப் பெறுகின்றனர். உலகப் பணக்காரர்களில் முதல் 200 பேர்களது வருமானம் 1994 ஆம் ஆண்டு 44 ஆயிரம் கோடி டாலர்களாக இருந்தது. இவர்களது வருமானம் 1998 ஆம் ஆண்டு அளவிலேயே அது 1லட்சம் கோடி டாலர்களாக மாறியுள்ளது! உலகில் உள்ள 100 மாபெரும் பொருளியல் முதலீட்டாளர்களில் 51 பேர் பன்னாட்டு வணிக நிறுவனங்கள். மற்றவைதான் அரசுகள்! 1995 கோபன்ஹெகன் மாநாட்டில் பல்வேறு உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இதில் பங்கெடுத்தன. தாராளமயப் போக்கால் 20 விழுக்காடு உலக மக்கள் சமூக ஏதிலிகளாக மாறுவர் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. இதற்கான தீர்வுத் திட்டங்களை, குறிப்பாக மேம்பாட்டு உதவிகளைத் தந்து அவர்களை முன்னேற்றிவிடலாம் என்று தொழில்மய நாடுகள் கூறின. ஆனால் அவ்வாறான மேம்பாட்டு உதவிகளைத் தொழில்மயநாடுகள் கொடுத்து உதவவில்லை. தொழில்மய நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உருவாக்கத்தில்(நிஞிறி) 0.7 விழுக்காட்டை இவ்வாறான மேம்பாட்டு உதவிகளுக்கு ஒதுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. பெருமளவு உலகளாவிய இயற்கைச் செல்வங்களையும் வாய்ப்புகளையும் பெற்று பூதாகரமாக வளர்ந்துவரும் அமெரிக்கா 0.12 விழுக்காடு அளவுதான் மேம்பாட்டு உதவிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதேபோல் பல தொழில்மய நாடுகளும் தங்களது உதவிகளைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் உதவிகளும் கல்வி, மருத்துவம் போன்ற நலத்திட்டங்களுக்கு அல்லாமல், போரைத் தூண்டுவதற்கான அல்லது நடத்துவதற்கான ஆயுதங்களை வாங்குவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. ஸ்பெயின் நாடு தனது உதவியில் 50 விழுக்காட்டுக்கு மேல் ஆயுதம் வாங்குவதற்காக மொராக்கோ, ஜோர்தான், சோமாலியா போன்ற நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இது அந்நாடு வழங்கிய கல்வி உதவியோடு ஒப்பிடுகையில் இது 40 மடங்கு கூடுதலாகும். இவ்வாறான முரண்பட்ட உதவித் திட்டங்களாலும் தங்கு தடையற்ற முதலீட்டாலும் வறுமையின் அளவு உலகெங்கும் பரவி வருகிறது. பணத்தின் திரட்சி ஓரிடத்தில் குவிந்திடவும், பசியும் பட்டினியும் பெரும்பகுதிகளில் பரவிடவும் ஏதுவாக உலக மயமாக்கம் அமைந்துவிட்டது. தொழில்மய நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. இப்போது வறுமையை அகற்றுவதற்காக, 2000ஆம் ஆண்டு உச்சிமாநாட்டில் 2015ஆம் ஆண்டை இலக்காக நிறுவியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையும் தனது அறிக்கையில் ஏழ்மையின் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி வருவதை ஒப்புக்கொள்கிறது. ஆப்பிரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால், அங்கு வாழும் மக்களின் 44 விழுக்காட்டினர் ஒட்டுமொத்த வறுமையில் வாடுகின்றனர். இதில், சகாராப் பகுதி மக்கள் 51 விழுக்காட்டினர் வறுமையில் உழல்கின்றனர். இதற்கும் மேலாக உலகநிதி நிறுவனங்களின் கடன்சுமை, வளரும் நாடுகளையும் வறுமை நாடுகளையும் மிகப் பெருமளவில் அழுத்தி வருகிறது. இந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உருவாக்கம் வட்டிகட்டவே போதுமானதாக இல்லை. மூன்றாம் உலக நாடுகளின் கடன்கள் பலவற்றையும் தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு மக்களமைப்புகள் போராடுகின்றன. உலகமயமாக்கத்தால் ஏற்கெனவே கடுமையான பொருளியல் வீழ்ச்சியைச் சந்தித்த நாடுகளான தென்கிழக்காசியா நாடுகள், பிரேசில், ரசியா போன்றவற்றுக்கு ‘மீட்டுருவாக்க உதவிகள்’ என்ற பெயரில் மேன்மேலும் கடன்களை வழங்கி மேலும் சிக்கலுக்குள் சிக்க வைக்கின்றன உலக நிதி நிறுவனங்கள் அது மட்டுமல்லாமல் வளரும் நாடுகளை உலகச் சந்தைக்குள் நுழைய விடாமல் தொழிலாளர் நலன், குழந்தை தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற மறுக்க முடியாத நெருக்கடிகளைக் கூறி நெருக்குகின்றன. காப்புரிமை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை பெற்று, அதை மீண்டும் மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்றுப் பொருழீட்டுகின்றன. இது ஒரு புறம் இருக்க மூன்றாம் உலக நாடுகளின் இயற்கைச் செல்வங்களையும் உயிரியியல் நுட்பங்களையும் பயன்படுத்தக் காப்புரிமை செய்து கொள்கின்றன. உயிர் காக்கும் மருந்துகளுக்கும் இப்படிப்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுக்கொண்டு மிகக் கூடுதலாக விலையில் அதை விற்க முற்படுகின்றன. இது குறித்து மூன்றாம் உலக நாட்டினர் எவ்வளவோ மன்றாடியும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை விட்டுக்கொடுக்கத் தொழில்மய நாடுகள் மறுத்துவிட்டன. இந்த உச்சி மாநாட்டில் உச்சமான கொடுமையாக ஐக்கியநாடுகள் அவையின் செயலர் கோபி அன்னான் வாசித்த அறிக்கையாகும். இவ்வறிக்கை உலக வங்கி, பன்னாட்டுநிதியம் ஆகியவற்றின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டதாகும். இவ்வறிக்கையின் சாரம் உலக வளமைக்கு ஒரே வழி தாராளமயமே என்பதாகும். இதைப் பல்வேறு அமைப்பினர் கண்டித்துள்ளனர். உலகெங்கும் பரவிவரும் வறுமையைக் கணக்கில் எடுக்காமல், இது வரை தாராளமயம் ஏற்படுத்திய கடும் விளைவுகளையும் ஆராயாமல் அவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஐக்கியநாடுகள் அவையின் செயலாளர் வாசித்தளித்தது வியப்பளிக்கிறது. உலகமயமாகும் வறுமையில் ஐக்கியநாடுகள் அவையும் இணைந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்தியாவும் இதே போக்கில் செல்வது மிகுந்த நெருக்கடியை உருவாக்கும். உள்ளூர் தொழில்களையும் தொழில் முறைகளையும் பாதுகாக்க அரசு தவறுமேயானால் மக்களது போராட்டம் இந்தியாவெங்கும் பரவும் என்பதில் ஐயமில்லை.
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/13 04:23 Erase cookies | Edit History | |