| Main page Recent changes | Edit History | |
doublingfarmincome | ||
|---|---|---|
உழவர்களின் வருமான இரட்டிப்பு (Edit)பரிதி(Edit)"உழவர்கள் நாட்டின் உணவாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவர்கள். நாம் நம் உணவாதாரத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. நம் உழவர்களுடைய வருமானப் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும். எனவே, வேளாண்மையிலும் பிற துறைகளிலும் சரியான முறையில் குறுக்கிடுவதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் நம் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கு அரசு பாடுபடும்.” - நிதி அமைச்சர் அருண் செய்ட்லி, நிதிநிலை அறிக்கைச் சொற்பொழிவு, 2016 பிப்ரவரி 29 2003 – 2013 கால இடைவெளியில் விலைவாசிகள் உயர்ந்த விகிதத்துடன் ஒப்பிடுகையில் உழவர்களின் வருமானம் ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு உயர்ந்தது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இறுதியில் அவர்களுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்கவேண்டுமானால் அது ஆண்டுக்கு 15% உயரவேண்டும்! இவ்வாறு வருமானம் உயர்வதற்கு நான்கு முதன்மையான தடங்கல்கள் உள்ளன: 1. விதைகள், உரங்கள், பாசனம் உள்ளிட்ட இடுபொருள்களின் செலவு வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது. 2003 – 2013 ஆகிய பத்தாண்டுகளில் வெளியிடுபொருள் செலவுகள் எவ்வாறு மாறின என்பதைப் பின்வரும் படம் வெளிப்படுத்துகிறது.
இந்தக் காலகட்டத்தில் உழவர்களின் வருமானம் 3.6 மடங்கு அதிகரித்தது; ஆனால், இடுபொருள் செலவுகள் மும்மடங்கு உயர்ந்தன. ஆகவே, நிகர வருமானம் மிகக் குறைந்த அளவே உயர்ந்தது! 2. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையின் பொருத்தப்பாடு வரவரக் குறைந்துவருகிறது. அரசு 23 பயிர்களுக்கு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை (குஆவி) பின்வரும் மூன்று காரணங்களால் பெரிய அளவில் பலனளிப்பதில்லை: அ. சராசரியாகக் கால் பங்கு உழவர்களுக்குத் தான் இது குறித்த தகவல் தெரிகிறது. சில பயிர்களைப் பொருத்தவரை வெறும் ஐந்து விழுக்காடு உழவர்கள் தான் குஆவி குறித்து அறிந்துள்ளார்கள். ஆ. அனைத்துப் பயிர்களுடைய குஆவி-ஐயும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2010-11-இல் 30%, 2011-12-இல் 53%, 2012-13-இல் 42%, என்ற விகிதங்களில் உயர்ந்த குஆவி, கடந்த மூன்றாண்டுகளில் ஆண்டொன்றுக்கு அதிகபட்சம் 12% தான் அதிகரித்துள்ளது. 18 பயிர்களின் குஆவி 2008-09 முதல் 2015-16 வரை ஆண்டுக்கு ஆண்டு எவ்வாறு மாறின என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது. எ.கா. 2007-08-ஐக் காட்டிலும் அடுத்த ஆண்டில் நெல் கொள்முதல் விலை (குஆவி) 20.8 விழுக்காடு அதிகரித்தது. இ. குஆவி-ஐ அதிகம் உயர்த்தினால் நுகர்வோருடைய உணவுச் செலவுகள் அதிகரித்துப் பண வீக்கம் உயரக்கூடும்.
3. விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்வரை சேமித்துவைப்பதற்குத் தேவையான கிடங்குகள், குளிர்பதனிகள் போன்ற வசதிகள் மிகக் குறைவு. உணவுப் பண்டங்களின் சில்லறை விற்பனை விலையில் வெறும் 10 முதல் 30 விழுக்காடு மட்டுமே உழவர்களுக்குக் கிடைக்கிறது! 4. உழவர்களில் 85 விழுக்காட்டினர் காப்பீட்டீன் பயனைப் பெறுவதில்லை. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுமார் மூன்றே முக்கால் கோடி உழவர்கள் காப்பீடு வாங்கியிருந்தனர். ஆனால் அவர்களில் சுமார் இரண்டு கோடிப் பேருக்குத் தான் அதன் பலன்கள் கிடைத்தன! நன்றி: A. Waghmare, “Why it is hard to double farmers' income by 2022”, IndiaSpend.com, 2016 March 30, http://www.indiaspend.com/cover-story/why-it-is-hard-to-double-farmers-income-by-2022
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/10 01:11 Erase cookies | Edit History | |