news2016jun

This revision is from 2016/06/09 09:35. You can Restore it.

திருநெல்லி விதை திருவிழா:

கேரளாவில் உள்ள வயநாட்டில் "திருநெல்லி விதை திருவிழா" கடந்த மே 27/28 நடந்தது. தனல் குழுவும், நமது நெல்லை காப்போம் இயக்கமும் திருநெல்லி பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய ஒரு விதை திருவிழாவாஅகும் இது.

கேரளத்தில் பஞ்சாயத்துக்கள் இது போன்ற மக்களது (அதுவும் விவசாயிகளின்) விழாக்களில், நிகழ்வுகளில் பங்கேற்பது புதிதல்ல என்பது பார்க்கவேண்டிய ஒன்று. முன்பே நாம் பார்த்தோம் 'பசுமை போராளிகள்' என்னும் கட்டுரையில், எப்படி அந்த வடக்கன்சேரி பஞ்சாயத்தும் அதன் தலைவரும் முன்னின்று அந்த பெரு பணியை எடுத்திச்சென்றனர் என்றும், அதனை தொடர்ந்து பல பஞ்சாயத்துக்களும் பின்னர் தம் நிதியிலிருந்து பல விதமான உதவிகளையும் செய்தனர் என்று!

அப்படி தான் இங்கு இந்த விதை திருவழாவை ஆரம்பித்த தனல் மற்றும் நமது நெல்லை காப்போம் ஆர்வலர்கள், பஞ்சாயத்திடம் இந்த நிகழ்வை முன்னின்று நடத்த விட்டனர். அவர்களும் காட்டிகுளம் என்னும் ஊரின் பேருந்து நிலையத்திலேயே இடமும் நிதியும் கொடுத்து மிக சிற‌ப்பாக கொண்டாடினர். கேரளத்தில் மிகவும் பிரபாலமான குடும்பஷ்ரீ பெண்கள் குழுவும் ஈடுபட்டனர். அதனாலேயெ ஒரு சிறிய பஞ்சாயத்து நகரத்தில் நடந்த இந்த விழா பெரும் ஆரவாரத்துடனும் பங்கேற்புடனும் வெற்றிகரமாக நடந்தேறியது.

பல குழுக்களின் விதை அரங்கங்கள், துலா இயற்கை ஆடைகள், பெண்கள் குழுக்களின் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பல வகைகளான அரிசி (நெல்லாகவும் அரிசியாகவும்) விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்பட்டு, மிக சிறப்பாக இருந்தது. உள்ளூர் பல்வேறு பெண்கள் குழுக்கள் பங்கு பெற்ற சமையல் போட்டியும் ஒரு பெரும் ஈர்ப்பு. பல வகாயான உணவு பொருட்கள், பாரம்பரிய மாற்றும் மிகவும் புதுமையான உணவு வகைகள் கொண்டு எல்லோரையும் அசத்தினர்.

இது பலா பழ பருவம். பலா சுளை மற்றும் கொட்டையிலிருந்து அல்வா முதல் அதிரசம் வரை 20க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் செய்யப்பட்டு கட்ட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தது ஒரு பெரும் சிறப்பு.


Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:24 Erase cookies Edit History