| Main page Recent changes | Edit History | |
பயணி | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/04 10:40. You can Restore it. வளர்ச்சியே உன் விலை என்ன?(Edit)பயணி(Edit)பொருளாதார முன்னேற்றம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டுவது என்று உலகமெங்கும் நம்பப்படுகிறது; ஊடக வலுவால் நம்ப வைக்கப்படுகிறது. இதன் விளைவாகப் பல நிரூபிக்கப் படாத ஊகங்கள் மெய்போல் பரப்பப் படுகின்றன. நல்வாழ்விற்குப் பணம் தேவை; பணம் ஈட்ட வேலை தேவை; வேலைகள் உருவாக்கப் பலகோடிகள் முதலீடு தேவை; முதலீட்டிற்கு அந்நியப் பணக்காரர்கள், முதலாளிகள் தேவை; முதலாளிகளுக்கு வளமான நிலம், நீர் ஆதாரம், ஆற்றல், சட்டத் தளர்த்தல்கள் போன்ற பலவசதிகள் தேவை; எனவே பொருளாதாரக் கொள்கை என்பது வளங்களை அழித்து ஆலைகளையும், ஆற்றல் ஊற்றுக்களையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் , அவற்றைப் பாதுகாக்கும் தற்போதைய சட்டங்கள் திருத்தி அமைக்கப் பட வேண்டும் என்று உலகம் முழுவதும் ஒரு கண்மூடித்தனமான, அறிவையே பயன்படுத்தாத மூட நம்பிக்கையுடன் இந்த "வளர்ச்சி"க்கு ஆட்படுத்துகிறார்கள். (இதைக் குறித்து நம் தாளாண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கை என்றொரு தொடர் எழுதியிருந்தோம்). இந்த ஊகங்களின் அடித்தளம் ஆயப்படுவதே இல்லை. அதைக் கேள்வி கேட்போரோ தேசத் துரோகக் குற்றங்களில் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். அமைதியாகக் காட்டில், யார் வம்புக்கும் போகாமல் தன்னிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினரைப் பெரும் வன்முறையுடன் இடம்பெயர்த்து (அப்புறப்படுத்தி) அங்கு அணை அமைக்கிறேன், ஆலை அமைக்கிறேன் என்று கோடிக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிப்பது எப்படி வளர்ச்சி ஆகும்?
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:22 Erase cookies | Edit History | |