| Main page Recent changes | Edit History | |
பயணி | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/04 10:34. You can Restore it. வளர்ச்சியே உன் விலை என்ன?(Edit)பயணி(Edit)பொருளாதார முன்னேற்றம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டுவது என்று உலகமெங்கும் நம்பப்படுகிறது; ஊடக வலுவால் நம்ப வைக்கப்படுகிறது. இதன் விளைவாகப் பல நிரூபிக்கப் படாத ஊகங்கள் மெய்போல் பரப்பப் படுகின்றன. நல்வாழ்விற்குப் பணம் தேவை; பணம் ஈட்ட வேலை தேவை; வேலைகள் உருவாக்கப் பலகோடிகள் முதலீடு தேவை; முதலீட்டிற்கு அந்நியப் பணக்காரர்கள், முதலாளிகள் தேவை; முதலாளிகளுக்கு வளமான நிலம், நீர் ஆதாரம், ஆற்றல், சட்டத் தளர்த்தல்கள் போன்ற பலவசதிகள் தேவை; எனவே பொருளாதாரக் கொள்கை என்பது வளங்களை அழித்து ஆலைகளையும், ஆற்றல் ஊற்றுக்களையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் , அவற்றைப் பாதுகாக்கும் தற்போதைய சட்டங்கள் திருத்தி அமைக்கப் பட வேண்டும் என்று உலகம் முழுவதும் ஒரு கண்மூடித்தனமான, அறிவையே பயன்படுத்தாத மூட நம்பிக்கையுடன் இந்த "வளர்ச்சி"க்கு ஆட்படுத்துகிறார்கள். (இதைக் குறித்து நம் தாளாண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கை என்றொரு தொடர் எழுதியிருந்தோம்).
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:22 Erase cookies | Edit History | |