Main page
Recent changes
Syntax
History
news2016jun
!திருநெல்லி விதைத் திருவிழா '''திருநெல்லி, வயநாடு, கேரளம் - 2016 மே 27, 28''' தனல் குழுவும், "நமது நெல்லைக் காப்போம்" இயக்கமும், திருநெல்லி பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய ஒரு விதைத் திருவிழா இயற்கை எழில் கொஞ்சும் வயநாட்டின் திருநெல்லியில் நடைபெற்றது. கேரளத்தில் பஞ்சாயத்துக்கள் இது போன்ற மக்களது (அதுவும் விவசாயிகளின்) விழாக்களில், நிகழ்வுகளில் பங்கேற்பது புதிதல்ல என்பது பார்க்கவேண்டிய ஒன்று. முன்பே 'பசுமை போராளிகள்' என்னும் கட்டுரையில், எவ்வாறு வடக்கஞ்சேரி பஞ்சாயத்தும் அதன் தலைவரும் முன்னின்று அந்தப் பெரும்பணியை எடுத்திச்சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து பல பஞ்சாயத்துக்களும் பின்னர் தம் நிதியிலிருந்து பல விதமான உதவிகளையும் செய்தனர் என்றும் நாம் பார்த்தோம்! அவ்வாறே இங்கு இந்த விதைத் திருவிழாவை ஆரம்பித்த தனல் மற்றும் 'நமது நெல்லைக் காப்போம்' ஆர்வலர்கள், திருநெல்லி பஞ்சாயத்தை இந்த நிகழ்வை முன்னின்று நடத்த விட்டனர். அவர்களும் காட்டிகுளம் என்னும் ஊரின் பேருந்து நிலையத்திலேயே இடமும் நிதியும் கொடுத்து மிக சிறப்பாகக் கொண்டாடினர். கேரளத்தில் மிகவும் பெயர்பெற்ற குடும்ப சிரீ பெண்கள் குழுவும் இதில் ஈடுபட்டனர். அதனாலேயே ஒரு சிறிய பஞ்சாயத்து நகரத்தில் நடந்த இந்த விழா பெரும் ஆரவாரத்துடனும் பங்கேற்புடனும் வெற்றிகரமாக நடந்தேறியது. பல குழுக்களின் விதை அரங்கங்கள், துலா இயற்கை ஆடைகள், பெண்கள் குழுக்களின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பல வகைகளான அரிசி (நெல்லாகவும், அரிசியாகவும்) விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்பட்டது மிகச் சிறப்பாக இருந்தது. பல்வேறு உள்ளூர் பெண்கள் குழுக்கள் பங்கு பெற்ற சமையல் போட்டியும் ஒரு பெரும் ஈர்ப்பு. அவர்கள் பல வகையான உணவுப் பொருட்கள், பாரம்பரிய மாற்றும் மிகவும் புதுமையான உணவு வகைகள் கொண்டு எல்லோரையும் அசத்தினர். இது பலாப்பழப் பருவம். பலாச்சுளை மற்றும் கொட்டையிலிருந்து அல்வா முதல் அதிரசம் வரை 20க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் செய்யப்பட்டு காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தது ஒரு பெரும் சிறப்பு. பாரம்பரிய நெல்லைக் காப்பதில் மட்டுமன்றி, அதன் முக்கியத்தைப் பரப்புவதிலும் தனல், நமது நெல்லைக் காப்போம் இயக்கங்கள் முனைவது நம்பிக்கையை வளர்க்கிறது. [[http://bsdinn.com/dl/news2.jpg] [[http://bsdinn.com/dl/news1.jpg]
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/09 09:24
Erase cookies
Syntax
History