Main page
Recent changes
Syntax
History
kss3
!!இயற்கை விவசாயத்தின் தடைக் கற்கள் பெருமளவில் வளர வாய்ப்புள்ளபோதும் இயற்கை விவசாயத்தின் வளர்ச்சி இந்தியாவில் கீழ்க் கண்ட சில பொது விடயங்களால் தாமதப்படுத்தப்படுகிறது. இப்பிரச்சனைகளை களைந்து இயற்கை விவசாய இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது நம் முன் இருக்கும் மிகப் பெரும் பொறுப்பு. i. இன்றைய பெரும் தேவைகளை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம் சாத்தியப்படாது என்ற மேலெழுந்த வாரியான மன மாயை- இது நம் கல்வி முறையோடு பெருமளவில் தொடர்புடையது. ii. நாட்டின் கடைக் கோடி மக்களுடன் மற்றும் குறு ,சிறு விவசாயிகளுடன் உள்ள தொடர்பு இடைவெளி. iii. இயற்கை விவசாய பொருட்களுக்கான கிடங்குகள் ,போக்குவரத்து மற்றும் சந்தைப் படுத்துதலில் உள்ள சவால்கள். iv. எளிமைப் படுத்தப்பட வேண்டிய சிக்கல்கள் பல நிறைந்த இயற்கை விவசாய சான்றளிப்பு முறைகள். v. இயற்கை விவசாயத்திற்கு எற்ற மரபு விதைகள் பெருமளவில் கிடைக்காமை. vi. இயற்கை விவசாயம் அறிவுபூர்வமானது. vii. இயற்கை விவசாயத்திற்கு பெருமளவில் ஆள் பலம் வேண்டும் என்ற மாயை. viii. இத்துறையில் மேலும் பல புதுமைகளைப் புகட்டி மெருகேற்ற போதிய விவசாய ஆராய்ச்சிக் கூடங்கள் இதற்கெனவே இல்லாமை. ix. இயற்கை விவசாயத்தை பெருமளவில் பரப்பாமல் மேலும் மேலும் செயற்கை உரங்களை மானியத்தில் தருவதையே தன் தலையாய கடமையென எண்ணும் அரசாங்க மனநிலை. x. செயற்கை உரங்கள் /வளர்ச்சியூட்டி விஷங்களின் பயன்பாட்டு விதி முறைகள், சந்தையாக்கம் சரிவர முறைப் படுத்தாமை .சட்ட விதி மீறல்கள். xi. அறிவியல் உண்மையற்ற தேவையில்லாத அசுரத்தனமான மரபணு மாற்று விதை/பொருட்களின் சந்தையாக்கம் மற்றும் பரவலாக்கம். xii. முறைப்படுத்தப்படாத இயற்கை விவசாய உள்ளீடுகள் (உரங்கள் /வளர்ச்சி ஊக்கிகள் ) தயாரிப்பு, தரம் மற்றும் சந்தையாக்கம். xiii. அரசாங்க கட்டமைப்புகள் மற்றும் அதன் கொள்கை செயல் திட்டங்கள் இயற்கை விவசாயத்தை பெருமளவில் கண்டுகொள்வதேயில்லை. xiv. இயற்கை விவசாய வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்காமை / நிதிப் பற்றாக்குறை. xv. தற்போது செயல் பாட்டில் உள்ள முறையாக ஒருங்கிணைக்கப்படாத செயல் படுத்தப்படாத அரசாங்க செயல் திட்டங்கள் மற்றும் மானியங்கள். xvi. இந்தியா முழவதும் பரந்து விரிந்துள்ள பல்வேறு வகைப்பட்ட விவசாய நில தகவமைப்புகள் மற்றும் மக்களின் தேவைகளைப் பற்றிய புரிதல். xvii. உள்நாட்டு கால்நடை இனங்களின் தேவை, மரபணு சேமிப்பு, அவற்றின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம், இயற்கை விவசாயத்தை அரவணைத்துச் செல்ல வேண்டும். xviii. இயற்கை விவசாய விளைபொருட்களின் இருப்பு, மலிவு விலை மற்றும் நுகர்வோர் நன்னம்பிக்கை பரவலாக்கப்படவேண்டும். பல் சிறப்புகள் கொண்ட இந்த இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல பெரும் நிதி ஆதாரமும் சிறந்த செயல் திட்டங்களும் தேவை. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/13 04:25
Erase cookies
Syntax
History