Main page
Recent changes
Syntax
History
kss3
!!நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்வுகள் பல முன்னோடி விவசாயிகள் இன்று நீடித்த சுற்றுச் சூழலை உறுதி செய்யும், நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி பூணும், வளர்ச்சியை நோக்கிய, அறிவியல் ரீதியிலான வேளாண்மை முறைக்கு மாறியுள்ளனர். இயற்கை வேளாண்மை ,ஜீரோ பட்ஜெட் விவசாயம் , சூழலியல் வேளாண்மை,பயோ டைனமிக் வேளாண்மை,ஆர்கானிக் விவசாயம்,கரிம வேளாண்மை,பெர்மா கல்ச்சர் எனப் பல பெயர்களில் அவை அழைக்கப்பட்டுப் பரவலாக்கப்படுகின்றன. இவையாவுமே செயல் வடிவத்தில் ஒரு சில வேறுபாடுகள் உள்ளதை போன்று தோன்றினாலும் இவை யாவுமே ஒத்த நோக்கத்தோடு நீடித்த நிலைத்த விவசாயத்திற்கே வழி வகுக்கின்றன, இம்முறைகள் 1) வேதியியல் /செயற்கை உரங்களை, மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துவதில்லை. இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறைகளை, தோட்டத்திலேயோ அல்லது உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் வளர்ச்சியூட்டிகளையோ கொண்டு மட்டுமே செயல் படுகின்றன. 2) இயற்கை வள சுரண்டலை தடுக்கிறது. இயற்கை வளத்தை வளர்த்து பாதுகாக்கின்றது. 3) பாதுகாப்பான நஞ்சற்ற தரமான உணவு உற்பத்தியை உறுதி செய்கின்றன. 4) கால்நடை வளர்ப்போடு கூடிய ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கின்றன. 5) கழிவுகளை மறுசுழற்சி செய்து உரங்களையும் ,அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எளிய பொருட்களின் மூலம் வளர்ச்சி ஊக்கிகளையும் தானே உற்பத்தி செய்து பயன்படுத்துவதின் மூலம் அதிகரித்து வரும் இன்றைய வேளாண்மை உற்பத்தி செலவுகளை குறைத்து நீடித்த வளர்ச்சிக்கு வழி காண்கின்றன. ஏழ்மை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு,புவி வெப்பமயமாதல் போன்ற பல தலையாய உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பொருளாதார மேம்பாடு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதிசெய்யும் மற்றும் விவசாய பெண்கள். தொழிலாளிகள்.குறு மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் சூழல் சார்ந்த விவசாயமே இன்றைய தலையாய தேவை என்பது உலகெங்கும் வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில், சூழல் சார்ந்த விவசாயம் i.இன்றைய முக்கிய விவசாய பிரச்சனைகளுக்கு விடையாக உள்ளது. ii. கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறது. iii.தற்சார்பான வாழ்கைக்கு வழி கோலுகிறது Iv.பாதுகாப்பான நஞ்சற்ற சத்துமிக்க உணவினை உற்பத்தி செய்கிறது. V.சமூக பொருளாதார பிரச்சனைகளை களைகிறது. Vi.சந்தை மட்டுமே நோக்கம் என்றாலும் கூட, வளர்ந்து வரும் செழிப்பான சந்தையை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த சூழலியல் விவசாயம் பெரும் பரப்பளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளன. எனவே இவை யாவும் தத்துவம் மட்டுமல்ல அதையும் தாண்டி இந்திய விவசாயத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் வளர்ச்சி பாதையில் செலுத்தும் நடைமுறையில் சாத்தியமான ஒரே கருவி.சூழலியல் அமைப்புகளையும் தாண்டி பல தரப்பட்ட மத, ஆன்மிக,கலாச்சார,கிராமிய முன்னேற்றத்தை சார்ந்த அமைப்புகளும் பெரும் அளவில் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி கொண்டுவருவதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இயற்கை விவசாயம் செய்யும் இந்த விவசாயிகளை ஆஷா (ASHA) கீழ்க்கண்டபடி வகைபடுத்துகிறது i. பரம்பரை இயற்கை விவசாயிகள் : பழங்குடி, மலை மற்றும் காடுகளை ஒட்டி வாழும் பல மக்கள் தொன்று தொட்டு இயற்கை விவசாயத்தை கடைபிடித்து வருகின்றனர். சந்தைகளில் கூவி விற்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லி விஷங்கள் இவர்களுக்கு கிடைக்காமல் இருப்பது கூட ஒரு காரணம். இவர்கள் பெரும்பாலும் தம் சொந்த நுகர்விற்க்காக உற்பத்தி செய்து மிஞ்சியதை உள்ளூர் சந்தையில் விற்று வருகின்றனர். ii. சந்தையை நோக்கிய இயற்கை விவசாயிகள்: சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இயங்கும் இயற்கை விவசாய விற்பனையாளர்கள் இவர்கள். iii. தன் முனைப்பு இயற்கை விவசாயிகள் : இவர்கள் இயற்கை மற்றும் பொது நல விரும்பிகள். இயற்கை விவசாயத்தை, வியாபாரத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுபவர்கள். முழு தன் ஆர்வம் மற்றும் தன் முனைப்பின் காரணமாகவே விவசாயம் செய்பவர்கள். சமூகம் ,சூழல் சார்ந்த பல கொள்கைகளோடு விவசாயம் செய்பவர்கள் . இவர்களில் பலரும் இயற்கை விவசாய பயிற்சிக் கூடங்களை பொது நலத்தோடு நடத்தியும் மேலும் அதை ஒரு இயக்கமாகவும் வழி நடத்தி வருபவர்கள். இந்த மூன்று வகைகள் தான் என்றில்லாமல் மேலும் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி இவற்றை பலவாறு வகைப்படுத்த முடியும். மூன்றாவது வகை இயற்கை விவசாயிகளை பெருமளவில் உருவாக்குவதன் மூலமே மிகப்பெரும் சூழல் சமுதாயம் விவசாயம் சார்ந்த புரட்சியோடு கூடிய வளர்ச்சியை எற்படுத்த முடியும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இயற்கை விவசாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கூறிய அனைத்து வகை இயற்கை விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லக் கூடிய பொறுப்பில் நாம் உள்ளோம்.
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/13 04:25
Erase cookies
Syntax
History