Main page
Recent changes
Syntax
History
kss3
!! தமிழாக்கம் A.K.ரவிசங்கர் (ஹைதராபாத் நகரில், 1-3 ஏப்ரல் , 2016 நாட்களில் நடைபெற்ற உழவர் விடுதலைப் பேரியக்கத்தில், சூழலியல் வேளாண்மை பற்றிய கலந்துரையாடல் குறிப்புகள்) செயற்கை உரங்கள் இல்லாது தோட்டத்தின் கழிவுகளையே மறுசுழற்சி செய்தும், மக்க வைத்தும் கால்நடை வளர்ப்போடு கூடிய பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வித்திடும் இயற்கை வழி வேளாண்மையே நம் மரபாக இருந்து வந்துள்ளது.1960 களில் ஏற்பட்ட நாட்டின் உணவுப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்திய அரசு பசுமைப் புரட்சியை வித்திட்டது. பசுமைப் புரட்சியின் கோரத் தாண்டவத்தையும் அது சமூகம், பொருளாதாரம் , சூழலியல், பொது சுகாதாரம் என ஒவ்வொரு தளத்திலும் ஏற்படுத்திய மாபாதக அம்சங்களையும் இப்போது பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா ஆய்வு அறிக்கைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சீரழிந்துவரும் மண் வளம், பாழடைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், இயற்கை வள சுரண்டல், நஞ்சாக்கப்படும் சுற்றுச் சூழல், வானுயர்ந்த விவசாய உற்பத்திச் செலவுகள், அதிகரித்து வரும் விவசாயக் கடன்கள் மற்றும் அதை சார்ந்த தற்கொலைகள் ஆகியவையே இன்றைய வேளாண்மையின் நிலையாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.லாபமற்ற நிலையற்ற நியாயமற்ற விவசாய சந்தையும் இயற்கைப் பேரிடர்களும் இப்பிரச்சனைகளை மேலும் பூதாகரமாக்குகின்றன. நம் உணவு இன்று செயற்கை உரங்களால் நஞ்சாக்கப்படுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சீரழிந்த விவசாயம் இன்று பசுமைப் புரட்சியின் சான்றாக உள்ளது. சுற்றுச் சூழலை கருத்தில் கொள்ளாமல் கொண்டுவரப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் நம் நாட்டில் எத்தகைய சீர்கேட்டினை விளைவிக்கும் என்று அம்மாநிலம் நமக்கு உணர்த்துகிறது.
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/13 04:25
Erase cookies
Syntax
History